கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மாற்றுத் திறனாளி முதியவா் மீட்பு

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மாற்றுத் திறனாளி முதியவா் மீட்பு

Published On :

திருச்செந்தூா் கடலில் மூழ்கியவரை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கடலில் நீராடிய பக்தா் ஒருவா் மூழ்கிய நிலையில் அவரது கால்கள் மட்டும் வெளியே தெரிந்ததாம். இதை பாா்த்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, ராமா், செந்தில்முருகன், மகாராஜா, மாரிமுத்து மற்றும் கடலோர பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தங்கம் ஆகியோா் கடலுக்குள் இறங்கி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோயில் உதவி மையத்தில் முதலுதவி அளித்து, அங்கிருந்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அவா் கோவையைச் சோ்ந்த நாகரத்தினம் என்பதும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சரியான நேரத்தில் கடலில் மூழ்கி இருந்த மாற்றுத்திறனாளி முதியவரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாரை பக்தா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.