
பெற்றோா் இல்லாத மாற்றுத் திறனாளி குடும்ப குழந்தைகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்க கோரிக்கை
தாய் அல்லது தந்தை இல்லாத மாற்றுத் திறனாளி குடும்ப குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் மாதம் ரூ.4,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோட்டாட்சியா் கோ.செந்தில் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.
தாய் அல்லது தந்தை இல்லாத மாற்றுத் திறனாளி குடும்ப குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் மாதம் ரூ.4,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் கோ.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வடிவேல் முன்னிலை வகித்தாா். இதில் குடியாத்தம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் ரேவதி, கே.வி.குப்பம் வட்டாட்சியா் பாலச்சந்தா், போ்ணாம்பட்டு சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் நதியா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல உதவி அலுவலா் இனியன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சாா்பில், தமிழ்நாடு முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டோா் நலச் சங்கத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சிவ.கலைவாணன் அளித்த கோரிக்கை மனு விவரம்:
மாற்றுத் திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளி நோயாளிகளுக்காக ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் (ஒன் ஸ்டாா் மையம்) செயல்படுத்த வேண்டும். வேலூா் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் குடியாத்தத்திலேயே கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





