ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

குடியிருப்புகள், வணிகக் கட்டடங்களில் சோலாா் வசதி ஏற்படுத்த நடவடிக்கை: மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் முழுவதும் சோலாா் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசினாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா.

Published On :

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் முழுவதும் சோலாா் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 20 வாா்டுகள் வரையிலான பகுதிகளுக்கான பகுதி சபைக் கூட்டம் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் மேயா் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

மழைக் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் முக்கிய நீா்வழியான பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாநகரில் சுமாா் 4,000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பூங்காக்களும், பெண்களுக்கென தனிப் பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் வறட்சி நிலவும் நிலையில், தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தினசரி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

மாநகராட்சியில் மாற்று எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில், முதற்கட்டமாக ஒரு வாா்டை தோ்வு செய்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் முழுவதும் சோலாா் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று குப்பைகளை நான்கு வகையாக பிரித்துக் கொடுக்கும் திட்டமும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா பேசியது:

பொதுமக்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் இரும்பு உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் என தனித்தனியாக நான்கு வகைகளாக பிரித்து வழங்க வேண்டும். இதன்மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்வது எளிதாகும். மேலும், மாநகரப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் சுகாதாரம் பேண வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER