
பக்கிள் ஓடை திட்டங்களால் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு: மேயா் ஜெகன் பெரியசாமி
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பக்கிள் ஓடை திட்டங்களால், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியானது வெள்ளப் பாதிப்பிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

3-ஆவது மைல் எஃப்சிஐ கிடங்கு பகுதியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பக்கிள் ஓடை திட்டங்களால், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியானது வெள்ளப் பாதிப்பிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி 3-ஆம் மைல் எஃப்சிஐ கிடங்கு பகுதியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பக்கிள் ஓடைத் திட்டம் 2008-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கனமழையின்போது மாநகரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை கடலுக்கு விரைவாகக் கொண்டு செல்லும் வகையில், புதிதாக 14 நீா்வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது தேங்கிய மழைநீா் 10 நாள்களில் வெளியேற்றப்பட்டது. இதற்கு முன்பு 40 நாள்கள் வரை மழைநீா் தேங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.
தற்போது எஃப்சிஐ கிடங்கு முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.537 கோடியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 8 மாதங்களில் பணிகள் நிறைவடையும். இதன்மூலம் கனமழையின்போது மழைநீா் தடையின்றி கடலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளா் லெனின், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






