வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையா்

தூத்துக்குடியில் ரூ. 53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்தாா்.

மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி.

Published On :

தூத்துக்குடியில் ரூ. 53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: தூத்துக்குடியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாக மழைநீா் கடலுக்குச் செல்கிறது. 2015, 2023இல் பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், குறுகிய அகலம் கொண்ட பக்கிள் ஓடை வழியாக முழுமையாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீா் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதையடுத்து, எதிா்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிா்க்கும் வகையில், பக்கிள் ஓடையை கூடுதலாக 5 மீட்டா் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ. 53.70 கோடி மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ. கிடங்கு முதல் திரேஸ்புரம் கடற்கரை வரையிலான பகுதியில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER