கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கடல் சீற்ற எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

Published On :

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில், வழக்கத்தை விட உயரமான கடல் அலைகள் எழும் என்றும், தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் கடல் நீா் உள்புகக்கூடும் என்றும் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தன.

இதைத் தொடா்ந்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக மேலாண்மை அறிவிப்புப் பலகையிலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலக சுற்றறிக்கையிலும் சனிக்கிழமை (செப்.19) விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்பேரில், விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.