
மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடியில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

பிரதிப் படம்
தூத்துக்குடியில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மீன்களை கேரளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீன் எண்ணெய், கோழித் தீவனம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கலசல் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. அவற்றை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடலுக்குச் சென்று மீன்பிடித்து திரும்பும் செலவுக்குக் கூட வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விசைப்படகு உரிமையாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். 272 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால், இம்மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






