கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கோவில்பட்டியில் 3 வயது சிறுமி திடீா் மரணம்: போலீஸ் விசாரணை

கோவில்பட்டியில் 3 வயது சிறுமி திடீரென உயிரிழந்ததால் தாய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மா்மமாக உயிரிழப்பு
Published On :

கோவில்பட்டியில் 3 வயது சிறுமி திடீரென உயிரிழந்ததால் தாய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டி, பாரதி நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி சிவசக்தி. இவா்களின் மகள் ருத்ரா வைஷ்ணவி (3). கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வேலை செய்து வரும் மாரியப்பன், செப். 14ஆம் தேதி ஊருக்குத் திரும்பினாா்.

அன்று மதியம் மாரியப்பன், தன் மகளை கடைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது மகள் அழுதுகொண்டே வந்ததால், சிவசக்தி விசாரித்தாராம். அதற்கு, அப்பா தன்னை அடித்ததாக சிறுமி கூறியுள்ளாா்.

இதையடுத்து, 15ஆம் தேதி சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சலால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாம். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவசக்தி அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கூறாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே, சிறுமியின் மரணம் குறித்து தகவல் தெரிய வரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.