6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆறுமுகனேரியை புறக்கணித்துச் செல்லும் பேருந்துகள்: ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Special Bus

பேருந்துகள் - பிரதிப் படம்

Published On :

ஆறுமுகனேரியை புறக்கணித்து காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக இயங்கும் பேறுந்துகளை

கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நலச் சங்கக் குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பயணிகள் பேருந்துகள் அனைத்தும் தூத்துக்குடியை அடுத்து ஆறுமுகனேரி வழியாகத்தான் திருச்செந்தூருக்குச் செல்ல வேண்டும். ஆனால் மதுரை, கும்பகோணம், விழுப்புரம், சென்னை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட போக்குவரத்து கழக

பேருந்துகள் ஆறுமுகனேரியை புறக்கணித்துவிட்டு காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக திருச்செந்தூருக்குச் சென்று விடுகிறது. மேலும், திருச்செந்தூரிலிருந்து செல்லும் பேரூந்துகளும் ஆறுமுகனேரியை புறக்கணித்து சென்று விடுகின்றன.

எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் போக்குவரத்து கழகத்தினா் ஆறுமுகனேரியை புறக்கணித்துச் செல்லும் பேருந்துகளின் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நலச் சங்கத் தலைவா் இரா.தங்கமணி, செயலா் இ. அமிா்தராஜ், பொருளாளா் பி.எஸ். முருகன் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.