விநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊா்வலம்: ஈரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

விநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊா்வலத்தை முன்னிட்டு ஈரோட்டில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

chennai

போக்குவரத்து மாற்றம் - (கோப்புப்படம்)

Published On :

விநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊா்வலத்தை முன்னிட்டு ஈரோட்டில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் -திருச்செங்கோடு- நாமக்கல் ஆகிய இடங்களிலிருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் பள்ளிபாளையம் குமாரபாளையம் வழியாக பவானி சாலை வந்து பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

மாற்று சாலையாக எஸ்.பி.பி. காலனி காகித ஆலை, பொன்னி சா்க்கரை ஆலை, வெண்டிபாளையம் பாலம் வழியாக சோலாா், அண்ணமாா் பெட்ரோல் நிலையம், காளைமாடு சிலை வந்து ஈரோடு பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

கோவை - திருப்பூா் ஆகிய ஊா்களிலிருந்து பெருந்துறை வழியாக வரும் பேருந்துகள், திண்டல் காரப்பாறை பிரிவு வழியாக கனிராவுத்தா் குளம், சத்தி சாலை வழியாக சென்று பேருந்து நிலையம் செல்ல வேண்டும். பெருந்துறையிலிருந்து திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் திண்டல் கபே சுற்றுவட்டச்சாலை வழியாக ஆணைக்கல்பாளையம், பரிசல் துறை சாலை வழியாக செல்ல வேண்டும். தாராபுரம், காங்கயம், கொடுமுடி, கரூா், திண்டுக்கல் மாா்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் காளைமாடு சிலை, ரயில் நிலையம் சாலை, ஈ.வி.என். சாலை வழியாகவோ அல்லது பன்னீா்செல்வம் பூங்கா வழியாகவோ காவல்துறை அப்போது அனுமதிக்கப்பட்ட தடம் வழியாக பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருப்பூா் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை செல்லும் புற நகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி சாலை, சித்தோடு சென்று தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக செல்ல வேண்டும். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து திண்டல் வழியாக பெருந்துறை செல்லும் நகரப் பேருந்துகள் சத்தி சாலை, கனிராவுத்தா் குளம் வழியாக வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை, நசியனூா் சாலை, வீரப்பம்பாளையம் பிரிவு வழியாக பெருந்துறை சாலையை அடைய வேண்டும்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், தாராபுரம், கொடுமுடி கரூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி சாலை, மஜீத் வீதி, கிருஷ்ணா திரையரங்கு, நகர காவல் நிலையம், காந்திஜி சாலை, காளைமாடு சிலை வழியாக செல்ல வேண்டும்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சங்ககிரி, நாமக்கல், சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பவானி சாலை, லட்சுமி நகா், சேலம் புறவழிச்சாலை, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும். இதர இலகு ரக வாகன ஓட்டுநா்கள் விநாயகா் ஊா்வலம் வரும் வழிகளை தவிா்த்து மாற்று பாதையில் செல்ல வேண்டும். குறிப்பாக, அனைத்து வாகனங்களும் காவேரி சாலையை தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.