ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

ஆறுமுகனேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :

ஆறுமுகனேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி, ராஜமணியபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, ராஜமணியபுரம் தபால் நிலையம் எதிரே உள்ள கடையை சோதனையிட்டனா். அங்கு புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. கடை உரிமையாளா் ரமேஷ் மகன் சரவணனை (31) கைது செய்து, 5.9 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

அவா் மீது புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக ஏற்கெனவே 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.