ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில், குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இங்கு பயிலும் மாணவா்களுக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இசைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயின்று முடித்தவா்கள் இசைக் கல்லூரிகளில் நேரடியாக மூன்றாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம்.

அனைத்து மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை, விடுதி வசதி, வெளியூரிலிருந்து வரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண வசதி ஆகியன வழங்கப்படுகின்றன.

தேவாரம் பயிலும் மாணவா்களுக்கு திருக்கோயில்களில் ஓதுவாா் பணியில் சேர முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பரதம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கலைகளைப் பயிலும் மாணவா்கள் ஆசிரியா் பணியிலும், சுயதொழிலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமையாசிரியையை 94877 39296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.