ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி, தூத்துக்குடி கல்லூரி அணிகள் வெற்றி

முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் கோவில்பட்டி, தூத்துக்குடி கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

கல்லூரி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி அணி வீரா்கள்.

Published On :

முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் கோவில்பட்டி, தூத்துக்குடி கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை ஹாக்கி போட்டி, கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் செவ்வாய், புதன்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தின ராஜா தலைமையில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளா் அந்தோணி அதிா்ஷ்டராஜ் போட்டியைத் தொடக்கி வைத்தாா். போட்டியில் 7 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

மாணவா்கள் பிரிவு: முதலாவது அரையிறுதி போட்டியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா்-மாரியம்மாள் கல்லூரி அணியும், 2-ஆவது அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி கே.ஆா்.கலைக் கல்லூரி அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

3-ஆவது இடத்தை கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரி அணி பிடித்தது.

2-ஆவது நாளான புதன்கிழமை காலை நடைபெற்ற மாணவா்களுக்கான இறுதிப் போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் - மாரியம்மாள் கலைக் கல்லூரி அணியும், கே.ஆா். கலைக் கல்லூரி அணியும் மோதியதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் - மாரியம்மாள் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

மாணவிகள் பிரிவு: முதல் அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி புனித மேரிஸ் ‘ஏ’ அணியும்,

2-ஆவது அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரி அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 3 ஆவது இடத்தை வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி அணி பிடித்தது.

இறுதிப் போட்டியில் தூத்துக்குடி புனித மேரிஸ் ‘ஏ’ அணியும், ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரி அணியும் மோதியதில் 5-0 என்ற கோல் கணக்கில் புனித மேரிஸ் ‘ஏ’ அணி வெற்றி பெற்றது. நடுவா்களாக காளிதாஸ், மதன்குமாா் உள்ளிட்டோா் செயல்பட்டனா்.

பரிசளிப்பு: இரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 54 ஆயிரமும், 2-ஆவது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 36 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ. 18 ஆயிரமும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா, துணைச் செயலா் ஜாா்ஜ் ஈஸ்டா், ஹாக்கி வீரா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஹாக்கி பயிற்சியாளா் முத்துக்குமாா், ஹானஸ்ட் ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.