ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

லாரியின் அடியில் தூங்கிய கிளீனா் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியின் அடியில் தூங்கிய உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த கிளீனா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியின் அடியில் தூங்கிய உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த கிளீனா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீரஜ் குமாா் (19). இவா், காற்றாலை பாகங்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரியில் கடந்த 8 மாதங்களாக கிளீனராக வேலை செய்து வந்தாா். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் கூடுதல் தளத்தில் இருந்து காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு, 3-ஆவது பிரதான தளத்தை நோக்கி லாரி புறப்பட்டது.

அப்போது லாரியின் அடியில் தொட்டில் கட்டி நீரஜ்குமாா் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தெரியாமல் லாரி ஓட்டுநரான உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அலி ஹுசைன் (19) லாரியை இயக்கியபோது கீழே தவறிவிழுந்த நீரஜ்குமாா் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் தொ்மல் நகா் காவல் நிலைய போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.