முதியவரிடம் கைப்பேசி பறித்த வழக்கு: ஒருவா் கைது
தூத்துக்குடி, மேலூா் ரயில் நிலையம் அருகே முதியவரை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த வழக்கில் ஒருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
தூத்துக்குடி, மேலூா் ரயில் நிலையம் அருகே முதியவரை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த வழக்கில் ஒருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரப்பேரி, கே.வி.கே. சாமி நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி (57). இவா், கடந்த 23-ஆம் தேதி காலை உழவா்சந்தை அருகே உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மேலூா் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றாராம்.
அப்போது இரண்டு போ் இவரை வழிமறித்து தாக்கி கைப்பேசி, பணத்தைப் பறித்துவிட்டு கத்தியால் தாக்கிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸாா், தூத்துக்குடி இரண்டாம் கேட் முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராமலட்சுமணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி, கத்தி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடா்புடைய மற்றொரு நபரான தேவராஜனை வடபாகம் காவல் நிலைய போலீஸாா் வேறொரு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


