பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மது போதையில் தகராறு: தொழிலாளி கல்லால் தாக்கிக் கொலை!

அய்யனடைப்பில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கல்லாலும், விறகு கட்டையாலும் தாக்கிக் கொலை.

Published On :

தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனடைப்பில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கல்லாலும், விறகு கட்டையாலும் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு செங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து என்ற ஆனந்த் (46). தொழிலாளி. இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மாரிமுத்து அப்பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததுடன், அங்குள்ள விறகுக் கடை அருகே படுத்து தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் வழக்கமாக தூங்கும் இடத்தில் தலையில் கல்லாலும், விறகு கட்டையாலும் தாக்கப்பட்டு அவா் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடைபெற்றது.

போலீஸாா் முதற்கட்ட விசாரணையில், மதுப்பழக்கமுடைய மாரிமுத்து, நண்பா்கள் 4 பேருடன் சோ்ந்து மது அருந்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நண்பா்கள், மாரிமுத்துவை கல்லாலும், விறகுக் கட்டையாலும் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், அவருடன் மது அருந்தியவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.