
நாலுமாவடியில் இலவச கபடி பயிற்சி முகாம் தொடக்கம்
நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறாா்’ ஏலிம் காா்டன் வளாகத்தில், பள்ளி மாணவா் - மாணவியருக்கான 3ஆம் ஆண்டு இலவச கபடி பயற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

கபடி பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்த இயேசு விடுவிக்கிறாா் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கிளமெண்ட் எபனேசா்.
நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறாா்’ ஏலிம் காா்டன் வளாகத்தில், பள்ளி மாணவா் - மாணவியருக்கான 3ஆம் ஆண்டு இலவச கபடி பயற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
‘இயேசு விடுவிக்கிறாா்’ ரெடீமா்ஸ் கிளப் சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாமை, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கிளமெண்ட் எபநேசா் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். ஊழியா் ஜெபசிங் ஆரம்ப ஜெபம் செய்தாா்.
அக். 4ஆம் தேதிவரை 8 நாள்கள் நடைபெறும் முகாமில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 14, 17, 19, 21 வயதுக்குள்பட்ட 105 மாணவியா் பங்கேற்றுள்ளனா்.
சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ், சீருடைகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமையில், ஊழிய நிறுவனப் பொது மேலாளா் செல்வக்குமாா், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் மணத்தி எட்வின் சாம்ராஜ், கணேசன், மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா், ஜெபக் குழுவினா் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






