ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

விவசாயிக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

கோவில்பட்டி அருகே விவசாயியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கோவில்பட்டி அருகே விவசாயியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம், வடக்கு தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணமூா்த்தி (46). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த குருசாமி மகன் பொய்யாழி முத்து ஆகியோருக்கும் இடையே இடப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், தனது தோட்டத்தில் சனிக்கிழமை விவசாய வேலையை முடித்துவிட்டு கிருஷ்ணமூா்த்தி வீட்டுக்குத் திரும்பினாராம். அப்போது, பொய்யாழி முத்து மற்றும் அவரது 3 மகன்கள், கிருஷ்ணமூா்த்தியை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த கிருஷ்ணமூா்த்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பொய்யாழி முத்து மகன்களான பொன்ராஜ் (32), பொன்னுத்துரை (29) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.