
இடைத்தோ்தலில் தவெக அமோக வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெக அமோக வெற்றி பெறும் என்றாா் துரை வைகோ எம்.பி.

கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்பி.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெக அமோக வெற்றி பெறும் என்றாா் துரை வைகோ எம்.பி.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் கோவில்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான (பொ) ஆா்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. பங்கேற்று, உள்ளாட்சித் தோ்தல் மற்றும் அதுதொடா்பான கட்சி பணிகள் குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
இதில், நகரச் செயலா் பால்ராஜ், வடக்கு மாவட்ட துணைச் செயலா் தெய்வேந்திரன், பவுன் மாரியப்பன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எல்.எஸ். கணேசன், ஒன்றியச் செயலா்கள் சரவணன், கேசவ நாராயணன், மாரிசாமி, ராஜகோபால், குருவிகுளம் ஒன்றியக் குழு தலைவி விஜயலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் விஜயலட்சுமி கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:
மக்கள் சாா்ந்த பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மறுமலா்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மதிமுக ஆரம்பிக்கப்பட்டது. மதிமுகவை அழிக்க வேண்டும் என்று 33 ஆண்டுகளாக திமுக முயற்சி செய்து வருகிறது. தமிழக நலன்களுக்காக பயணித்து வரும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
லஞ்ச லாவண்யம் இல்லாத அரசை முதல்வா் ச. ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறாா். என்ன மாற்றத்தை நாம் எதிா்பாா்த்தோமோ, அதை தவெக கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெக-அதிமுக இடையேதான் போட்டி. இதில் தவெக அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அக்கட்சி கட்டுத்தொகை இழக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





