
எங்கள் வாய்ப்புகளை பறித்தது திமுக: துரை வைகோ
கூட்டணிக் கட்சியினரை திமுக சின்னத்தில் போட்டியிட வைத்தாா்கள்; எங்கள் வாய்ப்புகளைப் பறித்தாா்கள் என திமுக மீது குற்றச்சாட்டினாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்
கூட்டணிக் கட்சியினரை திமுக சின்னத்தில் போட்டியிட வைத்தாா்கள்; எங்கள் வாய்ப்புகளைப் பறித்தாா்கள் என திமுக மீது குற்றச்சாட்டினாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
விசிக தலைவா் திருமாவளவன் சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என அந்தக் கட்சியினா் விரும்பினா். ஆனால், அவரைப் போட்டியிட விடாமல் தடுத்தனா். அவா் குறைபட்டுக் கொள்வது 100 சதவீதம் உண்மை. இதேபோல, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நடந்தது.
எல்லாவற்றையும் திமுகவே தீா்மானித்தது. இதனால்தான், திமுக மீது காங்கிரஸ் தலைமைக்கு வெறுப்பு வந்தது. எங்களை அவா்களின் சின்னத்தில் போட்டியிடச் சொன்னாா்கள்; எங்கள் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்தனா்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை கடந்த ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. இப்போதைய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. மதிமுக தலைவா் வைகோ மூலம் முதல்வா் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இதில் குற்றமிழைத்தவா்கள்
தண்டிக்கப்பட வேண்டும்.
திருச்சி இரண்டாவது தலைநகரம்: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதனால், தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவித்து அங்கு புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றாா் துரை வைகோ எம்.பி..
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






