மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வடகாடு நூலகம் மேம்படுத்தப்படுமா?

ஆலங்குடி, பிப். 4: ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில், மோசமான சூழலிலுள்ள நூலகத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.     வடகாட்டில் 1964-ம் ஆண்டு தனியார் கட்டடத்தில் நூலகம் தொடங்கப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:05 am

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி, பிப். 4: ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில், மோசமான சூழலிலுள்ள நூலகத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    வடகாட்டில் 1964-ம் ஆண்டு தனியார் கட்டடத்தில் நூலகம் தொடங்கப்பட்டது. 1988-ல் கிளை நூலகமாக இது தரம் உயர்த்தப்பட்டு, சந்தைப்பேட்டை பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

    இரு அறைகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் ஓர் அறை புத்தகங்களை வைப்பதற்கும் மற்றோர் அறை வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் இது போதுமான, நல்ல சூழல் கொண்ட ஒரு நூலகம்தான். ஆனால், இன்றைய காலகட்டத்திலோ இட நெருக்கடி மிகுந்த, மிக மோசமான சூழலில் இயங்கும் நூலகமாக மாறிவிட்டது.

    இட வசதியின்மை: தினந்தோறும் பல வாசகர்கள் வந்து செல்லும் இந்த நூலகத்தில் உள்ள இட வசதி இங்குள்ள புத்தகங்களுக்கும் சரி; வாசகர்களுக்கும் சரி; போதுமானதாக இல்லை.

    ஆண்டுதோறும் புதுப்புது புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கும் சூழலில் புத்தகங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஓர் அறை போதுமானதாக இல்லை. வாசகர்களின் நிலையும் இப்படியே. நூலகக் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் வழியாக மழைநீர் அறைக்குள் புகுவதால் புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பதற்குப் போதிய இடவசதி இல்லாமல், சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதன் மூலம் இங்கு நிலவும் இட நெருக்கடியைப் புரிந்துகொள்ளலாம்.

துர்நாற்றச் சூழல்: வடகாடு கடைவீதியின் அருகே இந்த நூலகம் அமைந்திருக்கும் குண்டு குளத்தின் வடகரை முள் புதர் காடாகக் காட்சியளிக்கிறது.

    வடகாட்டில் அன்றாடம் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு, கோழி மற்றும் மீன் கழிவுகள் இந்தப் பகுதியிலேயே கொட்டப்படுவதால், சுகாதாரக்கேடும் துர்நாற்றமும் எப்போதும் இங்கு சூழ்ந்திருக்கிறது.

    மேலும், இந்த மாமிசக் கழிவுகளை இரையாக உள்கொள்ள நாய்களும் காகங்கள் உள்ளிட்ட பறவைகளும் நூலகம் அமைந்திருக்கும் பகுதியை மொய்க்கின்றன. அவற்றின் நடமாட்டமும் இரைச்சலும் வாசகர்களை பெரும் தொந்தரவுக்கு ஆளாக்குகின்றன.

    திறந்தவெளிக் கழிப்பிடம்: இதுதவிர, நூலகத்தைச் சுற்றி தெரு விளக்குகள் இல்லாததாலும் புதர் போன்று இருப்பதாலும் நூலகத்தின் பிற்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.

    புதிய நூலகக் கட்டடம்: இந்நிலையில், வடகாடு நூலகத்துக்குப் புதிய கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதியில் பரவலாக ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டப்படும் வரை, இப்போதுள்ள நூலகக் கட்டடத்தையும் நூலகத்தின் புறச் சூழலையும் சீரமைத்து நூலகம் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுமக்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.