மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஒலிபெருக்கி,​​ அறிவிப்பு பலகைகளுடன் விழிப்புணர்வுச் சேவை

ஆலங்குடி, ஜன. 21: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடி பகுதியில் சுற்றுச்சூழலை காக்க ஒலிபெருக்கி, அறிவிப்பு பலகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது சுற்றுச்சூழல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:53 am

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி, ஜன. 21: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடி பகுதியில் சுற்றுச்சூழலை காக்க ஒலிபெருக்கி, அறிவிப்பு பலகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம்.

கறம்பக்குடி சீனிகடை சந்திப்பு முதல் தஞ்சாவூர் சாலையில் 7 திருமண மண்டபங்கள் உள்பட, ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும், இது போக்குவரத்து மிகுந்த, நெரிசலான சாலைகளில் ஒன்றாகும்.

இங்குள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெடிக்கப்படும் வெடிகள் அசாதாரனமானதாகவும், வெடியிலிருந்து வெளியேறும் புகை இப்பகுதியில் தொடர்ந்து வசிப்பவர்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

மேலும், வெடிச் சப்தம் குழந்தைகள், இருதய நோயாளிகளை அதிகம் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது. சரவெடி போன்ற அதிக நேரம் வெடிக்கக்கூடிய வெடிகளால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இப்பகுதியை சூழும் புகை மண்டலம் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதோடு, இங்குள்ள வியாபார நிறுவனங்களை இதுபோன்ற நிகழ்வுகள் பாதிப்பதுடன், இந்த நிறுவனங்களில் உள்ள கண்ணாடி பொருள்கள் உடைந்து நொறுங்க அசாதாரணமான வெடிகள் காரணமாக அமைகின்றன.

இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இப்பகுதியில் சிலரால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சங்கம் காவல் துறை அனுமதியுடன் வெடி வெடிப்பதை தடை செய்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பதாகைகளை பல இடங்களில் வைத்துள்ளது.

மேலும், சங்கம் சார்பில் வாரம்தோறும் கறம்பக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒலிபெருக்கியின் மூலம் இரவு நேரங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சுகாதார மேம்பாடு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அந்தந்தப் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தினர் சமூக சேவையாற்றி வருகின்றனர்.

புவி வெப்பமயமாதலைத் தடுக்க தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்தி இதுதொடர்பாக கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் நாடகங்களை நடத்தும் இந்த சங்கத்தினர் இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கி விழிப்புணர்வுப் பணியை தொடர்கின்றனர்.

மேலும், பெண்களிடம் சுற்றுச்சூழல் மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒருவாரம் தொடர்ந்து நடத்தப்படும் பிரமாண்ட கோலப்போட்டியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன மாவுகளைப் பயன்படுத்தாமல் மகளிரை கோலமிட வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவராக கடந்த ஆண்டு இளையமனோகரன் சிறப்பாக பணியாற்றிய நிலையில், நிகழாண்டு அந்தப் பணியை மனிதநேய செல்வர் விருது பெற்ற ஜே. ஜேம்ஸ் தொடர்கிறார்.

இதுகுறித்து ஜேம்ஸ் கூறியது:

மக்களின் தனிப்பட்ட பிரச்னைகளைவிட, சமுதாயத்தின் முக்கிய பிரச்னைகளை இந்த சங்கம் முன்னெடுத்து செயல்படுத்துகிறது. இந்தப் பணி எப்போதும் தொடரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.