பாபநாசம், நவ.25: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகரம் மற்றும் அதற்குள்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
பாபநாசம் நகரம் பாபநாசம், திருப்பாலைத்துறை, கஞ்சிமேடு, வங்காரம்பேட்டை, அரையபுரம் உள்ளிட்ட கிராமங்களைக் கொண்டது.
பாபநாசம் நகரில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் பல்வேறு பணிகளின் பொருட்டும், இங்குள்ள கோயில்களுக்கும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பாபநாசம் நகரப் பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால், இங்கு வருவோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். நகரின் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் தினமும் காலைக் கடன்களை கழிக்க அரசின் புறம்போக்கு நிலங்கள், ஆற்றின் கரைப் பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
காலைக் கடன்களை கழிக்க திறந்தவெளியைப் பயன்படுத்துவதால் மழைக் காலங்களில் மிகவும் சிரமத்திற்குள்ளாவதோடு, விஷக்கடிகளுக்கும் அப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க பாபநாசம் நகரின் முக்கியப் பகுதிகளில் பொது சுகாதார வளாகங்கள் அல்லது கட்டண சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஊராட்சிகளைப் போல பேரூராட்சிகளிலும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு தற்போது அறிவித்துள்ளது. இருப்பினும், திறந்தவெளியில் காலைக்கடன்களை கழிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, ஊராட்சியில் வீட்டுக்கு ஒரு கழிவறைத் திட்டம் செயல்பட்டு வருவது போல, நகரப் பகுதியில் வசிப்போருக்கும் கழிவறை இல்லாத வீடுகளுக்கு அரசின் மானியத்துடன் கழிவறைகள் கட்டித் தர வேண்டும்.
மேலும், நகரின் மையப் பகுதியில் செல்லும் கழிவுநீர்க் கால்வாய்கள் அடைபட்டுள்ளதால், மழைக் காலங்களில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்குகின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகமாகிறது.
எனவே, கழிவுநீர்க் கால்வாய்களை பேரூராட்சி நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் நகரம் முழுவதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
பாபநாசம் நகரில் இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்தில் உடைகளைத் தூய்மை செய்யவும், உலர்த்தவும் டோபி கானா கட்டித் தரப்பட்டுள்ளது போன்று ஆற்றுப்படித் துறைகளிலும் கட்டப்பட வேண்டும்.
பாபநாசம் நகரின் குடிநீர் இணைப்பு சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே உள்ளதால், மறு பகுதியில் உள்ளவர்கள் சாலையின் குறுக்கே சாலையைத் தோண்டி குடிநீர் இணைப்பைப் பெற வேண்டி இருந்தது.
இந்நிலையில், அந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டதால் சாலையைத் தோண்டி இணைப்பைப் பெற தடை உள்ளது.
இதனால், சாலையின் ஒரு பகுதியிலுள்ளவர்கள் குடிநீர் இணைப்பைப் பெற முடியாத நிலை உள்ளது.
எனவே, அனைத்துப் பகுதி மக்களும் குடிநீர் இணைப்பைப் பெறும் வகையில் சாலையின் இரு புறமும் குடிநீர் இணைப்பு வசதியை செய்து தர வேண்டும் என்றும் பாபநாசம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

