பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் அருகே கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மூன்று குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து, தற்கொலைக்கு முயற்சித்த தாய் மற்றும் குழந்தைகள் சனிக்கிழமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள நமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (43). விவசாயி. அவரது மனைவி செல்வராணி (38). இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதேபால, சனிக்கிழமை காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த செல்வராணி, இவர்களது குழந்தைகள் வனிதா (13), விக்னேஷ் (11), வினோதினி (9) ஆகிய மூன்று பேருக்கும் காபியில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து விட்டு, தானும் குடித்தாராம்.
இதையறிந்த அவர்களது உறவினர்கள் செல்வராணி மற்றும் குழந்தைகளை பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சனிக்கிழமை சேர்த்தனர். அங்கு நான்கு பேருக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மங்களமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.