டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

திருச்சி, ஜன. 8: திருச்சியில் கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சியைப் மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.   தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், தில்லைநகர் மக்கள் மன்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருச்சி, ஜன. 8: திருச்சியில் கதர், கிராமப் பொருள்கள் கண்காட்சியைப் மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

  தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், தில்லைநகர் மக்கள் மன்றத்தில் இந்தக் கண்காட்சி ஜன. 14 வரை நடைபெறுகிறது. இதில், திருச்சி சர்வோதய சங்கங்கள் சார்பில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

   கதர், பட்டு, பாலியஸ்டர் துணி ரகங்கள், ஆயத்த ஆடைகள், போர்வைகள், துண்டு ரகங்கள், மெத்தை, தலையணைகள் ஆகியவற்றுக்கு 20 முதல் 30 சதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 40 முதல் 70 சதம் வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  இங்கு சோப்புகள், தேன், சாம்பிராணி, ஜவ்வாது, பத்திகள், சந்தன மாலைகள், காலணிகள், "டெட்ராபேக்'கில் பதப்படுத்தப்பட்ட பதநீர், பனங் கல்கண்டு, பனஞ்சீனி, பனை வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்கப்படுகின்றன.    கண்காட்சித் தொடக்க நிகழ்ச்சியில், கதர் கிராமத் தொழில்கள் மண்டலத் துணை இயக்குநர் எஸ். சம்பத்குமார், உதவி இயக்குநர் சா. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.