மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காரைக்காலில் தமுமுகவினர் முற்றுகைப் போராட்டம்

காரைக்கால், ஜன. 8: காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தோருக்கு பயிற்சி தர நடத்தப்பட்ட முன்மாதிரித் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டதாகக் கூறி, காரைக்காலில் தமுமுகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

காரைக்கால், ஜன. 8: காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தோருக்கு பயிற்சி தர நடத்தப்பட்ட முன்மாதிரித் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டதாகக் கூறி, காரைக்காலில் தமுமுகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவை அரசு காவல் துறையில் உதவி ஆய்வாளர், காவலர், ஊர்க் காவல் படையில் பணிபுரிய ஆள்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இத் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்புத் துறையும் இணைந்து தேர்வுக்கான பயிற்சியை அளிக்கவுள்ளன.    இப் பயிற்சி முகாம் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.    முன்னதாக, இம் முகாமில் 100 பேருக்கு மட்டுமே பயிற்சி தரும் வகையில், விண்ணப்பித்தோரை அழைத்து முன்மாதிரித் தேர்வு நடத்தி 100 பேரை வேலைவாய்ப்புத் துறை தேர்வு செய்யது.

இவர்களில் முஸ்லிம் மாணவர்கள் ஒருவர்கூட இல்லையெனக் கூறி, தமுமுக சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்ற கல்லூரி முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.       தகவலறிந்து மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல் ரொசாரியோ, வேலைவாய்ப்பு அதிகாரி ப. கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பயிற்சி வகுப்பில் உரிய முறையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தர ஏற்பாடு செய்வதாக அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.