கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் அருகே கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மூன்று குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து, தற்கொலைக்கு  முயற்சித்த தாய் மற்றும் குழந்தைகள் சனிக்கிழமை மருத்துவ மனையில் அனுமத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் அருகே கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மூன்று குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து, தற்கொலைக்கு  முயற்சித்த தாய் மற்றும் குழந்தைகள் சனிக்கிழமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள நமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (43). விவசாயி. அவரது மனைவி செல்வராணி (38). இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இதேபால, சனிக்கிழமை காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த செல்வராணி, இவர்களது குழந்தைகள் வனிதா (13), விக்னேஷ் (11), வினோதினி (9) ஆகிய மூன்று பேருக்கும் காபியில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து விட்டு, தானும் குடித்தாராம்.

   இதையறிந்த அவர்களது உறவினர்கள் செல்வராணி மற்றும் குழந்தைகளை பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சனிக்கிழமை சேர்த்தனர். அங்கு நான்கு பேருக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

     இதுகுறித்து மங்களமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.