ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள்

திருச்சி, ஜூன் 21: ஆசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) ஆகிய இரு தேர்வுகளும் வரும் ஜூன் 26-ம் தேதியே நடைபெறவுள்ளதால், இரண்டுக்கும் சேர்த்து வி

Updated On :20 செப்டம்பர் 2012, 2:44 am

திருச்சி, ஜூன் 21: ஆசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) ஆகிய இரு தேர்வுகளும் வரும் ஜூன் 26-ம் தேதியே நடைபெறவுள்ளதால், இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழு ஆண்டுதோறும் இரு முறை தேசிய தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் முதுநிலைப் பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகச் சேரலாம். மத்திய பள்ளிக் கல்விக் குழு (சிபிஎஸ்சி) இந்த ஆண்டு முதல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) நடத்துகிறது. இதில் பிஎட் முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறுபவர்கள் சிபிஎஸ்சி பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகச் சேரலாம்.

முதுநிலைப் பட்டத்துடன் பிஎட் முடித்த லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் இவ்விரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த இரு தேர்வுகளும் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளன. இதனால், இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ளவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக விண்ணப்பதாரர்கள் கூறியது: "வழக்கமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் ரயில்வே பணிக்கான தேர்வு, வங்கிப் பணிக்கான தேர்வு ஆகியவை எப்போதாவது ஒரே நாளில் வரும் சூழல் ஏற்பட்டால், ஏதாவது ஒரு தேர்வு வேறொரு நாளுக்குத் தள்ளிவைக்கப்படும்.

அந்த நம்பிக்கையில் தற்போது இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்திருந்தோம். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எங்களில் பலருக்கு திருச்சியில் ஒரு தேர்வும், மதுரையில் ஒரு தேர்வும் நடைபெறுகிறது. இதனால், எந்தத் தேர்வில் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், இப்போதுள்ள இந்தச் சூழலை மத்திய அரசுக்கு விளக்கி ஏதாவது ஒரு தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.