விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தப்படுமா?
பெரம்பலூர், செப். 14: தமிழகத்தில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது. எனவே, இந்த மைதானங்களைப் பயன்படுத்


பெரம்பலூர், செப். 14: தமிழகத்தில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது. எனவே, இந்த மைதானங்களைப் பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், 2005 முதல் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள பொது இடங்கள், பள்ளிகளில் விளையாட்டு மைதானம், விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. இதற்காக, ஊராட்சிகளில் பொது இடங்களில் மைதானம் அமைக்க தலா ரூ. 50 ஆயிரமும், பள்ளிகளில் மைதானம் அமைக்க தலா ரூ. ஒரு லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள விளையாட்டுத் திடல்களைச் சீரமைத்தல், விளையாட்டுத் திடல்கள் இல்லாத பள்ளிகளில் புதிதாக அமைத்தல், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் சமுதாய விளையாட்டுத் திடல்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விளையாட்டு மைதானங்களில் கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பொருள்கள், தரைவிரிப்பு, பயிற்சி வலை, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலுக்கான மணல் குழி அமைத்தல், மேல் உந்துக் கம்பம், சதுரங்கப் பலகை, கேரம் பலகை, சிறுவர், சிறுமிகளுக்கான ஏற்ற இறக்கப் பலகை, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு, விளையாட்டு வீர்ரகளால் பயன்பாடுத்தப்படுகிறது.
மேலும், அண்ணா பிறந்த நாள், பொங்கல் திருநாள் போன்ற சில முக்கிய தினங்களில் இந்த விளையாட்டு மைதானங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பல ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மைதானங்கள் புதர் மண்டிக் கிடப்பதுடன், இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகும் சூழ்நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, விளையாட்டுத் துறையில் கிராமப்புற இளைஞர்கள் சிறந்து விளங்க, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட விளையாட்டு மைதானங்களைச் சீரமைப்பதுடன், தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...