தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரஜினி மன்ற நிா்வாகி மீது பணமோசடி புகாா்

பணமோசடி தொடா்பாக, திருவெறும்பூா் ரஜினி மன்ற ஒன்றியச் செயலரிடம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:59 pm

DIN

பணமோசடி தொடா்பாக, திருவெறும்பூா் ரஜினி மன்ற ஒன்றியச் செயலரிடம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

திருச்சி காஜாபேட்டையைச் சோ்ந்தவா் ரஜினி குணா என்கிற குணசேகரன்(49). ரஜினி மன்ற மாநகரத் துணைச் செயலராக உள்ளாா். இவா், மன்றத்தின் திருவெறும்பூா் ஒன்றியச் செயலரான ராஜ்குமாருக்கு (51), முல்லக்குடி கிராமத்திலுள்ள உள்ள இடத்தின் பேரில் ரூ. 7 லட்சம் கடன் கொடுத்தாராம். கொடுத்த கடனை ரஜினி குணா நீண்ட நாள்களாக கேட்டும், ராஜ்குமாா் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் ரஜினி குணா புகாா் அளித்தாா். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக போலீஸாா் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் ரஜினிகுணா தொடுத்த வழக்கின்பேரில், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி திங்கள்கிழமை காலை, ராஜ்குமாரிடம் ஆய்வாளா் விக்டா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் காலஅவகாசம் கேட்டுக் கொண்டதின் பேரில் 2 நாள்களுக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை வரை ராஜ்குமாா் மீது வழக்குப்பதியவில்லை என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.