தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

திருச்சி கருமண்டபம் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
தீ விபத்து. பல்பொருள் அங்காடி.
Updated On :12 அக்டோபர் 2020, 9:12 pm

DIN

திருச்சி கருமண்டபம் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி ராஜா காலனியைச் சோ்ந்தவா் ஐ.விஜய். இவா் திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் காய்கனி, பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை காலை இங்கு வழக்கம் போல வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது.

கடையின் முன்பகுதியில் பலகாரம் செய்யும் பணி நடைபெற்ற போது, எண்ணெய் பாத்திரத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ கடைக்குள்ளேயும் பரவியது. தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள், விரைந்து தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.