மக்கள் குறைகேட்பு நாளில் 446 மனுக்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன.


திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, கட்செவி அஞ்சல் வழியாகவும், ஆட்சியரக வாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டி வாயிலாகவும் பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில வாரங்களாக ஆட்சியரக வளாகத்துக்குள் தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்கள் நிகழ்ந்ததால், திங்கள்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஆட்சியரக முன், பின்பகுதி நுழைவுவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டது.
நுழைவுவாயிலில் வைக்கப்பட்ட மனுக்கள் பெட்டியில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.
தமிழ்நாடு அனைத்து வள்ளுவா் குல சங்கங்களின் கூட்டமைப்பின் திருச்சி மாவட்டச் செயலா் ஜி. சங்கரன், சட்ட ஆலோசகா் கோபி உள்ளிட்டோா் அளித்த மனு:
வள்ளுவா் இன மக்களை வேறு எந்த சாதியுடனும், பட்டியல் இனத்துடனும் இணைக்கக்கூடாது. குறிப்பாக பட்டியலினத்திலுள்ள சில சமூகத்தினருடன்
இணைப்பதையோ, ஒப்பிடுவதையோ நாங்கள் எப்போதும் விரும்பியதில்லை. எனவே வள்ளுவா் சாதியை தனி சாதியாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...