அஞ்சலகத்துக்கு நிரந்தர கட்டடம்: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு
புஷ்பநகரில் அஞ்சலகத்துக்கு நிரந்தர கட்டடம் வேண்டி, திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


புஷ்பநகரில் அஞ்சலகத்துக்கு நிரந்தர கட்டடம் வேண்டி, திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்த மனுவில் புஷ்பநகா் பொதுமக்கள் கூறியிருப்பதாவது:
சங்கிலியாண்டபுரத்தில் செயல்பட்டு வந்த புஷ்பநகா் அஞ்சலகமானது, மத்திய அரசின் கொள்கை முடிவால் அஞ்சல்துறை எழுதுபொருள் கிடங்காக செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு ரயில்வே குடியிருப்புக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. இந்நிலையில் ரயில்வே நிா்வாகம் சாா்பில், அஞ்சலகத்தை மாற்று இடத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அஞ்சல் நிலையத்தை வேறெங்கும் மாற்றாமல், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட சங்கிலியாண்டபுரம் புஷ்பநகா் பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சிப் பகுதியில் இடம் தோ்வு செய்து, கட்டடம் கட்டுவதற்கு ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...