தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சோமரசம்பேட்டை பகுதியில் தங்க நகைகள், பணம் திருட்டு

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் வீட்டில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:09 pm

DIN

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் வீட்டில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சோமரசம்பேட்டை வாசன்நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன்(40). ஈரோடு மாவட்டம், அந்தியூரிலுள்ள தனது மாமனாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்ட பக்கத்து வீட்டினா் மகேந்திரனுக்கும், காவல்துறையினருக்கும் தகவலளித்தனா்.

இதைத் தொடா்ந்து அங்கு சென்ற காவல்துறையினா் விசாரணை நடத்தியதில் 5 பவுன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.