தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காவிரிப் பாலத்தை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்

திருச்சி காவிரிப் பாலத்தை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாக்கு ஓட்டப் போட்டி நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருச்சி காவிரிப் பாலத்தில் சாக்கு ஓட்டப் போட்டி நடத்தி, திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
Updated On :21 செப்டம்பர் 2020, 8:11 pm

DIN

திருச்சி காவிரிப் பாலத்தை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை சாக்கு ஓட்டப் போட்டி நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

1976-ஆம் ஆண்டில் ரூ.1.25 கோடியில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் பழுதடைந்ததால், 2016-ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. ஆனாலும் பாலத்தின் தாங்குத் தூண்களை இணைக்கும் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகனங்கள் செல்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவிரிப் பாலத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மாவட்டப் பொருளாளா் ஜெயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை இந்த நூதனப் போராட்டத்தை நடத்தினா்.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் வீரமணி, வருவாய் அலுவலா் செல்வநாயகம் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பாலத்தை விரைவில் சீரமைப்பதாகக் கூறினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் மாவட்டத் தலைவா் சுரேஷ், செயலா் லெனின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.