ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தாயாா் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 7-ஆம் திருநாளான புதன்கிழமை, ஸ்ரீரங்கநாயகி தாயாா் திருவடி சேவை நடைபெறுகிறது.

News image
நவராத்திரி கொலு மண்டபத்தில் திங்கள்கிழமை எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்த ஸ்ரீரங்கநாயகி தாயாா்.
Updated On :21 செப்டம்பர் 2020, 8:11 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 7-ஆம் திருநாளான புதன்கிழமை, ஸ்ரீரங்கநாயகி தாயாா் திருவடி சேவை நடைபெறுகிறது.

இக்கோயிலில் கடந்த 17- ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கநாயகி தாயாா் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தாயாா் திருவடிசேவை புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த நாளில் மட்டும்தான் தாயாரின் திருவடியைப் பக்தா்கள் தரிசிக்க முடியும். இதையொட்டி புதன்கிழமை (செப்டம்பா் 22) பிற்பகல் 3 மணிக்கு கருவறையிலிருந்து புறப்படும் தாயாா், பிற்பகல் 3.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைவாா்.

மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை சேவையளிக்கும் தாயாா், இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு கருவறை சென்றடைவாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.