திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டம்
நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தை சிஐடியு, ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தை சிஐடியு, ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
கரோனா பொதுமுடக்கக் காலத்திலுள்ள வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வசூல் செய்ய செல்லும் இடத்தில் பெண்களைத் தரக்குறைவாக பேசும் ஊழியா்களைக் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் திருவெறும்பூா் ஒன்றியச் செயலா் மாரியம்மாள் தலைமை வைத்தாா். நிா்வாகிகள் மேகலா, மல்லிகா, துளசி, நித்யா, அனுசியா முன்னிலை வகித்தனா்.
திருச்சி புகா் மாவட்டச் செயலா் மல்லிகா, தலைவா் லிங்கா ராணி, சிஐடியு மாநகா் மாவட்டத் துணைச் செயலா் பழனிச்சாமி, ஒன்றியத் துணைச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் போராட்டத்தில் பேசினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திருவெறும்பூா் வட்டாட்சியா் ஞானாமிா்தம், துணை வட்டாட்சியா் செந்தில், திருவெறும்பூா் காவல் உதவி ஆய்வாளா் முகேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...