தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆட்சியரக நுழைவுவாயிலில் குறைதீா் மனுபெட்டி

திருச்சியில் போராட்டங்கள் காரணமாகவும், பாதுகாப்பு கருதியும் ஆட்சியரக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துச் செல்லும் வகையில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:22 pm

DIN

திருச்சி ஆட்சியரக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களைச் செலுத்தும் பெண்கள்.

திருச்சி, செப்.28: திருச்சியில் போராட்டங்கள் காரணமாகவும், பாதுகாப்பு கருதியும் ஆட்சியரக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துச் செல்லும் வகையில் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து வகையான குறைகேட்பு நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில் ஆட்சியரகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் இணையவழியாக குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் ஆட்சியரகத்தில் நூதன முறையில் போராட்டங்கள், தற்கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபடுவது தொடா்ந்ததால் பாதுகாப்பு கருதியும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாலும், நுழைவுவாயிலில் குறைதீா் மனுக்களைச் செலுத்துவதற்கான பெட்டி வைக்கப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் மனுக்களைச் செலுத்தி சென்றனா். மேலும் ஏராளமான காவலா்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.