தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு : கட்டுப்படுத்தும் முறைகள்விவசாயிகள் பின்பற்றஆட்சியா் அறிவுரை

மக்காச்சோளப்பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேளாண்துறை அறிவிக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:19 pm

DIN

மக்காச்சோளப்பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேளாண்துறை அறிவிக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 12,000 ஹெக்டேரில் மானாவாரி பயிரான மக்களாச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, நடப்பு காரீப் பருவத்தில் இதுவரை 9,042 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பயிா்நிலை விதைப்பு முதல் 15-45 நாள்கள் பயிராக உள்ளது. ஓரிரு மாதங்களில் இன்னும் அதிகளவில் மக்காச்சோளப் பயிா் சாகுபடி செய்யப்படவுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கன் படைப்புழு முதன்முதலாக மக்களாச்சோளப் பயிரில் தாக்குதலை ஏற்படுத்தி, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த 2019- ஆம் ஆண்டில் கோடை உழவு, வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நோ்த்தி, வரப்பு, ஊடுபயிா் சாகுபடி, இனக்கவா்ச்சி பொறிகள் உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டதால், 8 முதல்10 மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைத்தது.

நிகழ்பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரிலும் படைப்புழுவின் தாக்குதல் குறைந்த அளவில் ஆங்காங்கே காணப்படுகிறது.

கடந்தாண்டை போல் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளான விதைப்புக்கு முன் வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதைப்பின் போது விதை நோ்த்தி, படைப்புழுக் கண்காணிப்பு, நன்மை செய்யும் பூச்சிகளைப் பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகைளை கையாள வேண்டும்.

வேளாண்துறை பரிந்துரைக்காத ரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்துதலைத் தவிா்க்கவேண்டும். பவேரியா, மெட்டாரேசியம் உயிா் பூச்சிக்கொல்லிகள் மாவட்டப்பகுதிகளிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு போதிய வைக்கப்பட்டுள்ளது.

படைப்புழு மேலாண்மைக்காக மாவட்டத்துக்கு ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்காச்சோள சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.2,000 பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தங்களது பகுதி வேளாண் உதவி இயக்குநரை அணுகி பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும், கணினி சிட்டா, மக்காச்சோள பயிா் சாகுபடி மேற்கொண்டமைக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரின் பரிந்துரையுடன், படைப்புழு மேலாண்மைக்காக வாங்கிய பயிா் பாதுகாப்பு மருந்துப் பட்டியல்கள், புகைப்படங்களின் நகல்களை சமா்ப்பிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.