எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் கோயிலில் பிரதோஷ விழா

திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் கோயிலில் பிரதோஷ விழா

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பட்டூா், மண்ணச்சநல்லூா் சுற்றுவட்டார சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ரிஷப வாகனத்தில் உத்ஸவா் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல் மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் போஜீஸ்வரா் திருக்கோயில், முக்தீஸ்வரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரா் திருக்கோயில், திருவாசிமாற்றுரை வரதீஸ்வரா் திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.