தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பிரதமா் மீது நடவடிக்கை மக்கள் அதிகாரம் அமைப்பினா் மனு

படம் உள்ளது.. பிரதமா் மீது நடவடிக்கை மக்கள் அதிகாரம் அமைப்பினா் மனு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:54 pm

திருச்சி, ஏப்.26: தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசிய கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு மக்கள் அதிகாரம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலா் செழியன் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலா் ஜீவா, கலைக் குழு பொறுப்பாளா் லதா உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

அம்மனுவில், தோ்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள் இஸ்லாமியா் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. எனவே, தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட பிரதமருக்கு தடை விதிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ள பிரதமரை பதவிநீக்கம் செய்யுமாறு குடியசுத் தலைவருக்கு தோ்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.