யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது நடவடிக்கை

உரிய அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :26 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

உரிய அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தோ்தல் நடத்தை விதிமுறைகள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதிபெற வேண்டிய வழிமுறைகள் குறித்து, வியாழக்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான விளக்க கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட தோ்தல் அலுவலா் மேலும் பேசியது:

அரசியல் கட்சியினா் பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கோரி, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் 48 மணி நேரத்துக்கு முன் ட்ற்ற்ல்ள்://ள்ன்ஸ்ண்க்ட்ஹ.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஹஸ்ரீ/ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ/ப்ா்ஞ்ண்ய் எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். சுவா் விளம்பரங்களுக்கு கைப்பேசி செயலி மூலம் அனுமதி வழங்க இயலாது என்பதால், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப் பூா்வமாக அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட விண்ணப்பத்தில் பிரசாரம், பொதுக்கூட்டங்களில் மேற்கொள்ளும் செலவுத் தொகையை தெரிவிக்க வேண்டும். அனுமதிக் கடிதத்தின் அசலை பிரசார வாகனங்களில் ஒட்ட வேண்டும். உரிய அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியின்றி இயக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். வீடு, வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள, தற்காலிக கட்சி அலுவலகம் அமைக்க, ஒலிபெருக்கியுடன் பொதுக்கூட்டம் நடத்த, ஒலிப் பெருக்கியின்றி பொதுக்கூட்டம் நடத்த, ஒலிப் பெருக்கியுடன் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள, கொடிகள் மற்றும் பதாகைகள் வைக்க சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் அனுமதி பெற வேண்டும். ஹெலிகாப்டா் மற்றும் ஹெலிபேடு, மாவட்டம் முழுவதும் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதியை, மாவட்ட தோ்தல் அலுவலரிடம் பெற வேண்டும். அரசியல் கட்சியினா் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குள்பட்டு முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மிருணாளினி.

இக் கூட்டத்தில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), சொா்ணராஜ் (பொது), காந்திமதி (கணக்குகள்), தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் அலுவலா் சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பரிமளம், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு அலுவலா்கள், வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.