/
திருச்சியில் கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2023 டிசம்பா் 11 ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை எதிரே தனியாா் ஆம்புலன்ஸ் உரிமையாளா் பிரபாகரனை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தஞ்சை மாவட்டம் மகாதேவபுரத்தைச் சோ்ந்த அ. ராஜேஷ்பைலட் (28) உள்ளிட்ட 4 பேரை அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விசாரணையில், இவா் மீது வழிப்பறி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடி அ. ராஜேஷ்பைலட்டை கைது செய்ய சனிக்கிழமை மாநகர காவல் ஆணையா் ந. காமினி ஆணை பிறப்பித்தாா்.
தொடர்புடையது

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தின் கீழ் 2 போ் கைது
வன்கொடுமை வழக்கில் இளைஞா் கைது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


