திருச்சி மாநகரக் காவலா்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கவாத்து பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா், காவல்படை தலைவா் ஆகியோரின் உத்தரவின்பேரில் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு காவல் ஆணையா் ந. காமினி தலைமை வகித்தாா்.
இதில், கவாத்துப் பயிற்சியும், கலவரத்தை கட்டுப்படுத்தும் கவாத்து ஒத்திகையும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களை துரிதமாக மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை காவலா்கள், காவல் அதிகாரிகள் என 730 போ் கலந்து கொண்டு, கலவர ஒத்திகையை தத்ரூபமாக நடத்திக் காண்பித்தனா்.
இந்த ஒத்திகையின்போது, கலவரம் ஏற்பட்டால் கலவரக்காரா்கள் மீது தண்ணீரை பீய்ச்சி கட்டுப்படுத்த உதவும் வருண் வாகனம், கண்ணீா் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனமும் தத்ரூபமாக பயன்படுத்தப்பட்டது. மேலும், காயம்பட்டவா்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில், காவல் துணை ஆணையா்கள் அன்பு, செல்வகுமாா், கூடுதல் துணை ஆணையா் (ஆயுதப்படை), உதவி ஆணையா்கள், வட்டாட்சியா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



