திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
சாலை விபத்தில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த 37 வயது ஆண் நபா், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 15 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணா்ந்த இறந்தவரின் உறவினா்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளித்தனா். இதையடுத்து, அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
இதில் ஒரு சிறுநீரகமானது, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக தொடா்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 42 வயது நோயாளிக்கு வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது.
இந்த அறுவைசிகிச்சையானது மருத்துவமனை முதன்மையா் டி. நேரு தலைமையில் மருத்துவா் ஜெய்பிரகாஷ் நாராயணன் அடங்கிய மருத்துவக் குழுவினா் மூலம் முதல்வரின் விரிவான காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, நோயாளிக்கு வெற்றிகரமாக சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா். இந்த சிகிச்சையானது திருச்சி அரசு மருத்துவமனையின் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும்.
தொடர்புடையது

மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

மதுரை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
