ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

2 சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுவனுக்கு தாயின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை!

புதுச்சேரியில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த 11 வயது சிறுவனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரது தாயின் சிறுநீரக பொருத்தப்பட்டது குறித்து...

News image

சிறுநீரகம் பொருத்தப்பட்ட சிறுவன் மற்றும் சிறுநீரகம் கொடுத்த தாய், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முருகேசன். - டிஎன்எஸ்

Updated On :23 மே 2026, 2:59 pm IST

புதுச்சேரியில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த 11 வயது சிறுவனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரது தாயின் சிறுநீரகத்தை பொருத்தி தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த புகழ்பெற்ற சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முருகேசன், புதுச்சேரியை சேர்ந்த குரு பிரசாத் என்ற 11 வயதான சிறுவன் சிறுநீரக செயலிழப்பால் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்தத் துயரத்தில் இருந்து மகனை மீட்கும் வகையில் அவரது தாயார் ஒரு சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்தார் என்றும் அறுவை சிகிச்சை மூலம் ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டு, அதை சிறுவனுக்கு பொருத்தி மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளதாகவும், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையை, உயிா் சக்தியை அளித்துள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து சிறுவனும் தாயாரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், டாக்டர் ப்ளூ இந்தியா அறக்கட்டளை சார்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசு காப்பீட்டு திட்டங்களின் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, அதிக அளவில் கொழுப்பு மற்றும் நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர் முருகேசன். மருத்துவர் மட்டுமின்றி மனிதநேயம், தியாகம் மற்றும் கருணை ஒன்று சேரும்போது ஒரு உயிருக்கு மீண்டும் புதிய வாழ்வு கிடைக்கும் என்பது இந்த அறுவை சிகிச்சை மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.

Summary

Private Hospital Achieves by Transplanting Mother's Kidney into Boy with Failed Kidneys!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.