ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி மாநகா் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2024, 10:04 pm

Din

திருச்சி: மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் ஜூலை 10 ஆம் தேதி இருக்காது.

எனவே, அன்றைய தினம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

ஜூலை 11 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும்.