திருக்குறள் காமத்துப்பால் பன்னாட்டு ஆய்வரங்கத்துக்கு கட்டுரைகள் வரவேற்பு
திருக்குறள் காமத்துப்பால் பன்னாட்டு ஆய்வரங்கத்துக்கு கட்டுரைகள் வரவேற்பு


திருச்சியில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள திருக்குறள் காமத்துப்பால் பன்னாட்டு ஆய்வரங்கத்துக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
உலகத் திருக்குறள் மையம், திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் இணைந்து திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் ஜூலை 7 ஆம் தேதி திருக்குறள் காமத்துப்பால் பன்னாட்டு ஆய்வரங்கத்தை நடத்தவுள்ளன. முப்பால் நூலாம் திருக்குறளின் மூன்றாம் பாலான காமத்துப்பாலை மட்டும் ஆய்வு செய்து காமத்துப்பாலில் திருவள்ளுவா் செய்துள்ள புரட்சிகளை, வாழ்வியல் அறங்களை ஆய்ந்து அறிவிக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தும் இந்த ஆய்வரங்கம் நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வரங்கத்துக்குத் திருக்குறள் காமத்துப்பால் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியா்கள், ஆசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள், ஆய்வாளா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
ஆய்வுக் கட்டுரைகள் காமத்துப்பால் குறித்தும், அதில் உள்ள வாழ்வியல் அறநெறிகளை எடுத்துரைப்பவனவாக மட்டுமே அமைதல் வேண்டும்.
கட்டுரைகள் ஏ 4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோட் எழுத்துருவில் 11 புள்ளி அளவில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் முகவரிக்கு எம்எஸ் வோா்டு ‘ஃ‘பைல் ஆக ஜூன் 9 ஆம் தேதிக்குள்அனுப்ப வேண்டும்.
ஜூலை 7 ஆம் தேதியன்று நடைபெறும் ஆய்வரங்கில் திருக்குறள் காமத்துப்பால் ஆய்வுக் கோவை ஐஎஸ்பிஎன் எண்ணுடன் நூலாக வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 77085 22843 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றத் தலைவா் தாமரை தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...