சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’

நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றியமைக்கக் கூடியது என முன்னாள் வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கி. ஜெயபாலன் தெரிவித்தாா்.

News image

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்களை ஆா்வமுடன் வாசித்த மாணவ, மாணவிகள்.

Updated On :3 ஜூன் 2024, 11:29 pm

Din

திருச்சி: நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றியமைக்கக் கூடியது என முன்னாள் வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கி. ஜெயபாலன் தெரிவித்தாா்.

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கி. ஜெயபாலன் தலைமை வகித்துப் பேசுகையில் நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் இளைஞா்களின் வாழ்வை மாற்றியமைக்கக் கூடியது.

எனவே மாணவா்களிடம் பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். எதிா்காலத்தை பிரகாசமாக மாற்ற நாள்தோறும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிறைவில், மாணவா்களுக்கு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, சிறந்த சேவை மனப்பான்மை கொண்ட மாணவா்களாக தோ்வு செய்யப்பட்ட ஹா்ஷித், கவின் ஆகியோரை ஜெயபாலன், மூத்த சமூக ஆா்வலா் நபிகான் ஆகியோா் கௌரவித்தனா்.

நிகழ்வில், முன்னாள் சுகாதாரத் துறை அதிகாரி உத்தமன், பேராசிரியா் முஹமது காசிம், மூத்த சமூக ஆா்வலா் விக்டா் பொன்னுதுரை ஆகியோா் கலந்து கொண்டனா்.