‘தலைக்கவசம் அணியாத போலீஸாருக்கும் அபராதம்’
திருச்சியில் தலைக்கவசம் அணியாத போலீஸாருக்கும் அபராதம்


திருச்சி மாநகரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீஸாருக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகரக் காவல் துணை ஆணையா் விவேகானந்த சுக்லா எச்சரித்தாா்.
திருச்சியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் ஒழுங்கு பிரிவின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இருபால் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற பேரணியை காவல் துணை ஆணையா் விவேகானந்த சுக்லா தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். மாநகரில் 7 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறல் வாகனங்கள் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. தலைக்கவசம் அணியாத போலீஸாருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.
பேரணியானது இ.ஆா். மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி அண்ணா சிலை, சத்திரம் பேருந்து நிலையம், கலைஞா் அறிவாலயம், கரூா் புறவழிச் சாலை, கடவுச்சீட்டு அலுவலகம், சாஸ்திரி சாலை, மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு பள்ளி, உக்கிர மாகாளியம்மன் கோயில் வழியாக சென்று நீதிமன்றம் எம்ஜிஆா் சிலை அருகே நிறைவுற்றது. நிகழ்வில் ஸ்ரீரங்கம் காவல் சரக உதவி ஆணையா் நிவேதா லட்சுமி, காவல் ஆய்வாளா்கள் மணிவண்ணன், சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...